தலைப்புச் செய்தி

Thursday, December 22, 2011

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து மத்திய அரசு இன்று வெளியிடும்

இதுகுறித்து, இன்று மாலை மத்திய அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து, காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக பேசி வந்தாலும், தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட விரும்புவதாக தெரிகிறது. 5 மாநிலங்களின் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு, நாளை வெளியிடப்படுகிறது. எனவே, நாளை முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதால், இன்று இரவுக்குள் இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது. சிறுபான்மையின மக்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வர, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்ற பாடுபடும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து மத்திய அரசு இன்று வெளியிடும்"

Post a Comment