லோக்பால் வரம்புக்குள் சிபிஐ கொண்டு வரப்படாததால், சமாஜ்வாதி உள்ளிட்ட சில கட்சிகள், மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி மவுனம் சாதித்து வருகிறது. இதனால், லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதோ, அதோ, என்று எதிர்பார்த்த லோக்பால் மசோதா ஒரு வழியாக மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அவை முன்னவரும், நிதி அமைச்சருமான பிரணப் முகர்ஜி, பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களோடு, நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மசோதா தொடர்பான விவாதம் வரும் 27-ந் தேதி முதல் நடைபெறும் என்று தெரிகிறது. லோக்பால் வரம்புக்குள் சிபிஐ கொண்டு வரப்படாத விவகாரம் தொடர்பாக முக்கிய எதிர்க்கட்சியான பாரதின ஜனதா, மவுனம் சாதிக்கிறது.
ஆனால் அதே சமயம், லோக்பால் விவகாரத்தில், மத்திய அரசுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக வெளியாகும் தகவல் பொய்யானது என்றும் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இடதுசாரி கட்சிகளும் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்பே, அது பற்றி தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளன.
“லோக்பால் மசோதா வரம்புக்குள் சிபிஐ கொண்டு வரப்படாததற்கு, காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் சமாஜ்வாதி, ராஷ்டீரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதனால், லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் அதனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தாலும், மக்களவையில் 3-ல் 2 பங்கு எம்பிக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியும்”, என்று சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்





0 comments: on "பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே, மக்களவையில் லோக்பால் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது."
Post a Comment