முல்லைப் பெரியாறில் இப்போதிருக்கும் அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டியே தீர வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி புதன்கிழமை கூறினார்.
தமிழகத்துக்கு இப்போது வழங்கப்பட்டுவரும் உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு தொடர்பாக திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்களின் சிறப்புக் கூட்டத்தில் பல்வேறு கேள்விகளுக்கு சாண்டி பதிலளித்தார்.
முல்லைப் பெரியாறு அணையின் ஆயுள்காலம் 50 ஆண்டுகள்தான். இரு மடங்கு காலம் அது பயன்பட்டிருக்கிறது. இப்போது எங்களது கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். புதிய அணை கட்டப்பட வேண்டும். மற்றபடி தமிழகத்துடனான எல்லா ஒப்பந்தங்களையும் நாங்கள் மதிப்போம்' என்றார் சாண்டி.





0 comments: on "புதிய அணை கட்டியே தீர வேண்டும்: உம்மன் சாண்டி"
Post a Comment