தலைப்புச் செய்தி

Tuesday, December 13, 2011

தொலைபேசி அலைப்பு எந்த இடத்திலிருந்து வருகிறது என்பதை கண்டறிய


தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்முடைய தொலைபேசி எண்ணை வைத்து ஓன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.
மொபைல் டிரேஸ் அல்லது போன் டிரேஸ் என்று சைபர்கிரைமில் உள்ளவர்கள் கண்டுபிடிக்க உபயோகப்படுத்தும் அதே தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும் ஓரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும்.
அதுமட்டுமின்றி மேப்பும் சேர்த்தே கொடுக்கின்றனர். இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற பட்டனை அழுத்தவும்.


இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின் விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும். அதே போன் நம்பரின் மேப்பை பார்ப்பதற்கு map+ என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப்பயும் பார்க்கலாம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தொலைபேசி அலைப்பு எந்த இடத்திலிருந்து வருகிறது என்பதை கண்டறிய"

Post a Comment