தலைப்புச் செய்தி

Tuesday, December 13, 2011

சமாதானத்திற்கான நோபல் பரிசு தவக்குல் கர்மானுக்கு வழங்கப்பட்டது.


சமாதானத்திற்கான நோபல் பரிசு யெமனிய செயற்பாட்டாளரும், அரச எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவருமான தவக்குல் கர்மானுக்கு நேற்று நோர்வேயில் வழங்கப்பட்டது.
நோபல் குழுவின் தலைவர் தோர்ப்ஜோஏர்ன் ஜாக்லண்ட் ஒஸ்லோ நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் இதனை வழங்கி வைத்தார்.
தவக்குல் கர்மான் நோபல் பரிசு பெறும் அறபுலகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு வரலாற்றில், இப்பரிசைப் பெறும் வயதில் மிகவும் இளையவர் இவரே என்பது இன்னொரு முக்கியமான அம்சம்.
இம்முறை மூன்று பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. யெமனிய செயற்பட்டாளர் தவக்குல் கர்மான், லைபீரிய ஜனாதிபதி எலன் ஜோன்ஸன் சிர்லீப், லைபீரிய சமாதான செயற்பாட்டாளர் லெய்மாஹ் கபோவி ஆகியோருக்கே 2011 க்கான நோபல் சமாதான விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அடக்குமுறை நிலவும் நாடுகளில் உயிர்த்துடிப்புடன் செயற்படும் பெண்களே இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சமாதானத்திற்கான நோபல் பரிசு தவக்குல் கர்மானுக்கு வழங்கப்பட்டது."

Post a Comment