| இந்திய மாநிலமான கேரளா மற்றும் தமிழக எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜே.எம்.ஹாரூன், என்.எஸ்.வி.சித்தன் ஆகியோர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| இந்திய மாநிலமான கேரளா மற்றும் தமிழக எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணை விவகாரமாக மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து பேசியுள்ளனர். மேலும் கேரளாவில் உள்ள இடுக்கி, தேவி குளம், பீர்மேடு பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் எனவும் இதற்காக பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். பின்னர் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் பதற்றத்தைத் தணிக்க இரு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர். |





0 comments: on "தமிழகத்துடன் இடுக்கி மாவட்டத்தை இணைக்க பிரதமரிடம் கோரிக்கை"
Post a Comment