ஏமன் நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த அலி அப்துல்லா சலேவின்(Ali Abdullah Saleh) ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிசுடு தாக்குதல் நடத்தினர். அதற்கு ஐ.நா.சபையும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்ததுடன் ஜனாதிபதி சலே பதவி விலக வலியுறுத்தினர்.
அதற்கு சம்மதித்த சலே பதவி விலகவில்லை. இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் மற்றும் பணம் முடக்கப்படும் என ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பும், அரபு நாடுகளும் மிரட்டல் விடுத்தன.
அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 23ந் திகதி சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த விழாவின் போது, பதவி விலக சம்மதித்து ஒப்பந்தத்தில் சலே கையெழுத்திட்டார்.
அப்போது சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதர்களும் உடன் இருந்தனர்.
இதையடுத்து கடந்த ஒருவாரத்துக்கு முன்பு ஜனாதிபதி பதவியில் இருந்து சலே விலகினார். தனது ஆட்சி அதிகாரத்தை துணை ஜனாதிபதி அபேத் ரப்போ மன்சூர் ஹாதியிடம் ஒப்படைத்தார்.
ஏமன் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடக்க இருக்கிறது. அதுவரை ஹாதி இடைக்கால ஜனாதிபதியாக இருப்பார். ஆனால் ராணுவமும், நாட்டின் பாதுகாப்பு குறித்த அதிகாரமும், சலேவின் பொறுப்பில் தான் உள்ளது. இதற்கு ஏமன் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெயரளவுக்குதான் சலே அதிபர் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஹாதியின் பின்னால் இருந்து கொண்டு ஆட்சி அதிகாரம் செலுத்துகிறார். எனவே அவர் முழுமையாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அங்கு தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது





0 comments: on "ஏமன் ஜனாதிபதி சலே பதவி விலகினார்"
Post a Comment