தலைப்புச் செய்தி

Monday, December 5, 2011

அமெரிக்கா அடிபணிந்தது பாகிஸ்தானுக்கு

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் 24 பேர் பலியானார்கள்.
இதனையடுத்து தங்களுக்கு சொந்தமான ஷம்சி விமான தளத்தை விட்டு 15 நாளில் வெளியேற வேண்டும் என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதியாக கூறியது.
மேலும் விமான தளத்திற்கு செல்லும் அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அடைத்தது. இதனை தொடர்ந்து அமெரிக்கா ஷம்சி விமான தளத்தை விட்டு வெளியேற தொடங்கியுள்ளது.
இதற்காக அமெரிக்காவுக்கு சொந்தமான விமானம் ஒன்று பாகிஸ்தான் வந்துள்ளது. விமான தளத்தில் பணிபுரிந்த அமெரிக்கர்கள் பாதுகாப்புடன் விமானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அமெரிக்கா அடிபணிந்தது பாகிஸ்தானுக்கு"

Post a Comment