தலைப்புச் செய்தி

Saturday, December 17, 2011

அண்ணா நூலகத்தை இடம்மாற்றுவதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தின் இடமாற்றத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அரசு தரப்பில் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
5 பேர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், நுங்கம்பாக்கம் கல்வித்துறை வளாகத்தில் புதிய நூலகம் கட்டும் பணிகள் ஏதாவது நடைபெறுகிறதா என்று நீதிமன்றம் கேட்டது.


அரசுத் தரப்பில் இல்லை என்று பதில் வந்தபின், மறு உத்தரவு வரும்வரை, கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது.


மேலும், ஜன.19ம் திகதிக்குள் பதிலளிக்குமாறு கூறிய நீதிமன்றம், ஜன.19ம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது. மேலும், தற்போதைய நிலையில் உள்ள அண்ணா நூலகத்தை சீராகப் பராமரிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அண்ணா நூலகத்தை இடம்மாற்றுவதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு"

Post a Comment