தலைப்புச் செய்தி

Saturday, December 17, 2011

ராமர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய தடை!


சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன் நகரில் ராமச்சந்திர மூர்த்தி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ராமர் கோவில் 1986ம் வருடம் கட்டப்பட்டது. இங்கு அம்மாபேட்டை, வித்தியாநகர், பச்சப்பட்டி ஆகிய பகுதியில் இருக்கும் அனைத்து சமூக மக்களும் சாமி கும்பிட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் பச்சபட்டி பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று அறிவிப்பு கோவில் கதவில் ஒட்டப்பட்டிருந்தது.

இதனால், தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் முன்பு திரண்டு நிர்வாகத்தினருக்கு எதிராக முழக்கமிட்டனர். பொதுமக்களிடமிருந்து நிதிவசூல் செய்து கட்டப்பட இந்த கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அம்மாபேட்டை காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்குவந்த காவல் ஆய்வாளர் இராமாண்டவர் பொதுமக்களிடமும், கோவில் நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை அகற்றினார். முன்பு போலவே எல்லா தரப்பு பொதுமக்களும் கோவிலுக்குள் செல்லலாம் யாரும் உங்களை தடுக்கக் முடியாது என்று பொதுமக்களிடம் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ராமர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய தடை!"

Post a Comment