ரலேகான் சித்தி:மத்திய விவசாய துறை அமைச்சர் சரத்பவாரின் கன்னத்தில் அறைந்த சம்பவத்தை தொடர்ந்து ஹஸாரே வெளியிட்ட மோசமான விமர்சனத்தை தொடர்ந்து அவருடைய சொந்த கிராமமான ரலேகான் சித்தியில் என்.சி.பி(தேசியவாத காங்கிரஸ்) தொண்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பவாரை தாக்கியதை கண்டித்து முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள என்.சி.பி ஹஸாரே மன்னிப்பு கோரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. யாதவ் பாவா கோயிலை நோக்கி பேரணியாக சென்ற என்.சி.பி தொண்டர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
என்.சி.பி தொண்டர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அங்கு பெண்களும், குழந்தைகளும் அடங்கிய மக்கள் திரண்டனர். பின்னர் ஹஸாரேவும் அங்கு வந்தார். நீங்கள் ஏன் இவ்வளவு ஆவேசப்படுகிறீர்கள்? விவசாயிகளை லத்தி சார்ஜ் செய்தபொழுது ஏன் நீங்கள் ஆவேசப்படவில்லை? என ஹஸாரே என்.சி.பி தொண்டர்களிடம் கேள்வி எழுப்பினார். மத்திய அமைச்சர் சரத் பவாரை இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்தது குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அன்னா ஹசாரே, “பவாருக்கு ஒரே ஒரு அடிதான் கிடைத்ததா?” என்று கிண்டலாக கூறியிருந்தார். பின்னர் அவர் சம்பவத்தை கண்டித்தார்.
0 comments: on "போலி காந்தியவாதி ஹஸாரேயின் கிராமத்தில் என்.சி.பி போராட்டம்"
Post a Comment