தலைப்புச் செய்தி

Saturday, November 26, 2011

குஜராத்: அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட திருநங்கை கொலை!


குஜராத் மாநிலத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த திருநங்கை சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள லால் தர்வாஜா பகுதியைச் சேர்ந்தவர், இம்ரான் அஜ்மிரி. 40 வயதான திருநங்கையான இவர், 350-க்கும் மேற்பட்ட திருநங்கைகளின் தலைவராக உள்ளார்.

நேற்று அவர் நேரு பாலம் பகுதிக்குச் சென்றிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் சென்றனர். எனினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட திருநங்கை இம்ரான், கடந்த 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்து காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குஜராத்: அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட திருநங்கை கொலை!"

Post a Comment