தலைப்புச் செய்தி

Sunday, November 27, 2011

நேட்டோ விநியோகப் பாதை மூடப்பட்டது:பாக். இராணுவம் அதிரடி


ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளுக்கான விநியோகப் பொருட்கள் போகும் பாதைகள் அனைத்தையும் மூடியுள்ளதாகப் பாகிஸ்தான ராணுவம் கூறியுள்ளது.
ஆப்கான் -பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயுள்ள பாகிஸ்தான சோதனைச் சாவடியொன்றின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை நடந்த நேட்டோ ஹெலிகாப்ட்டர் தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் 25 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘இன்றைய தாக்குதலுக்கான தக்க பதில் நடவடிக்கை இருக்கிறது, அது என்ன என்பதை பாகிஸ்தான் ராணுவம் தீர்மானித்துக் கொள்ளும்’ என்று பாகிஸ்தான் ராணுவத்தின் சார்பில் பேசிய ஜெனரல் அதர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது என்று உண்மையை அறிய விசாரணைகளை நடத்துவதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைக் கடும் கோபத்தைக் கிளப்பும் செயல் என்று வர்ணித்த பாகிஸ்தானப் பிரதமர் யூசுப் ரசா கிலானி பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளார்.
கொல்லப்பட்டவர்களின் உறவினர், மற்றும் குடும்பங்களுக்கு - ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளின் தலைமைத் தளபதி ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நேட்டோ விநியோகப் பாதை மூடப்பட்டது:பாக். இராணுவம் அதிரடி"

Post a Comment