கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியைச் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் '' ஜெயலலிதா ஆட்சியில் போயஸ் கார்டன் மனநல மருத்துவமனையாக மாறினாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை'' என்று தெரிவித்தார்.
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப் பட்டு கடலூரு சிறையில் அடைக்கப் பட்டு இருக்கும் பொன்முடியை திமுக பொருளாளர் ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சாத்தூர் ராமச் சந்திரன், எ.வ வேலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் ஸ்டாலின் உடன் சென்று இருந்தனர்.
பொன்முடியைச் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் '' திமுக ஆட்சியில் கருணாநிதியால் நிறைவேற்றப் பட்ட காப்பீட்டுத் திட்டம் , வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் அடியோடு நிறுத்தப் பட்டுள்ளன. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றிய ஜெயலலிதா 13500 மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது கண்டிக்கத் தக்கது.
கடந்த அதிமுக ஆட்சியில் இதே போன்று மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்ய ப்பட்ட போது 70 பேர் தற்கொலை செய்து மாண்ட கொடுமையான சம்பவம் நடைபெற்றது. அது தொடர்கதையாகும் சூழல் உருவாகியுள்ளது.ஜெயலலிதாவின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இளைஞர் அணி சார்பில் வருகிற 15 அன்று அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் கூட மனநல மருத்துவமனையாக மாறினால் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
0 comments: on "போயஸ் கார்டனை மனநல மருத்துவமனையாக மாற்றுவார் - ஸ்டாலின்!"
Post a Comment