ஊழலுக்கு எதிராக வலுவான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றப் போராடி வரும் அன்னா ஹசாரே குழு நாள் தோறும் புதுபுதுப் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள கிரண்பேடி தம்மை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கும் ஏற்பாட்டாளர்களிடம் இருந்து சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்து விட்டு அதிகக் கட்டணம் பெற்றதாக புகார் எழுந்தது.
இவ்விவகாரம் குறித்து தபோது கருத்து தெரிவித்துள்ள அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள மற்றொரு உறுப்பினரான அர்விந்த் கேஜ்ரிவால் '' கிரண்பேடி அப்படிச் ( செலவளித்ததை விட அதிகக் கட்டணம் பெற்றது ) செய்து இருக்கக் கூடாது. இனி அவ்வாறு செய்ய மாட்டேன் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார். கிரண்பேடி செய்ததைப் போன்று நான் எதுவும் செய்ய வில்லை'' என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள கிரண்பேடி மீது சக குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவரே கருத்து கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





0 comments: on "அன்னா குழுவில் புகைச்சல், பேடி செய்தது தவறு - கேஜ்ரிவால்!"
Post a Comment