தலைப்புச் செய்தி

Tuesday, November 29, 2011

சிறைத்தாண்டி வருவாயா-கனிமொழி

டெல்லி:6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் கழித்து விட்ட திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி இன்று சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார்.

டெல்லி உயர்நீதிமன்றம் கனிமொழிக்கு நேற்று நிபந்தனை ஜாமீன்அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இரவே அவர் வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் திஹார் சிறைக்கு வெளியே மீடியாக்கள் குழுமியிருந்தனர். அதேபோல திமுகவினரும் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். இருப்பினும் ஜாமீன் தொடர்பான நீதிமன்ற உத்தரவு, 2ஜி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு சிபிஐ கோர்ட்டுக்கு தாமதமாக வந்தது. 

அதற்குள் சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி வீட்டுக்குக் கிளம்பி விட்டார். இதனால் கனிமொழியை விடுவிப்பது நேற்று இயலாததாகி விட்டது. இதனால் நேற்று இரவும் கனிமொழி சிறையிலேயே கழித்தார்.

நேற்று கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டபோது அவர் உயர்நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. மாறாக சிபிஐ கோர்ட்டில் 2ஜி வழக்கு தொடர்பாக ஆஜராகியிருந்தார்.

இன்று சிறப்பு சிபிஐ நீதிபதியிடம் உயர்நீதிமன்ற உத்தரவு அளிக்கப்படும். அதன் பின்னர் அவர் கனிமொழி உள்ளிட்டோரை விடுவிக்க உத்தரவிடுவார். அதன் பின்னர் அந்த உத்தரவு திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டு அவர்கள் கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்வர். இந்த நடைமுறைகள் முடிய இன்று முற்பகலுக்கு மேலாகி விடும் என்று தெரிகிறது.



 கனிமொழி சென்னை வரும்போது பலமான வரவேற்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆறுமாதங்களாக சிறையில் இருந்துவிட்டு வருகிறார்.
உள்ளத்தால் எல்லோரும் ஒன்றுபட்டு வரவேற்றால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றார் கருணாநிதி. கனிமொழி சென்னை வரும்போது அவரை எப்படி வரவேற்பீர்கள் என்று கேட்டதற்கு, அப்பாடா…. வந்தாயா என்பேன் என்றார் கருணாநிதி.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சிறைத்தாண்டி வருவாயா-கனிமொழி"

Post a Comment