தலைப்புச் செய்தி

Tuesday, November 29, 2011

நிதி மோசடி:கிரண்பேடியை ஆதரிக்கும் ஹஸாரே குழு


காஸியாபாத்:சட்டவிரோதமாக அறக்கட்டளைக்கு வந்த நிதியை மோசடி செய்ததாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய கோரும் ஹஸாரே குழுவின் மத்தியக்குழு உறுப்பினருமான கிரண்பேடி மீது வழக்கு பதிவுச்செய்யப்பட்டுள்ள சூழலில் இக்குற்றச்சாட்டு போலியானது என ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கிரண்பேடி நடத்தும் இந்தியா விஷன் அறக்கட்டளைக்கு வந்த நிதியை, தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படை, தொழிற்பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் ஆகியவற்றில் பணி செய்வோரின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவச கணிணி பயிற்சி அளித்ததில், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுக்குறித்து பேட்டி அளித்த அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில்,’கிரண்பேடி முறைகேடு செய்ததற்காகவோ, மோசடியில் ஈடுபட்டதற்காகவோ அவர் மீது புகார் கூறப்படவில்லை, மாறாக வலிமையான லோக்பால் சட்டம் கொண்டு வர போரடியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஒரு பொய்யானப் புகார் என்று நாங்கள் ஆணித்தரமாக சொல்கிறோம். இது தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு தவறானது. இந்த குற்றச்சாட்டில் ஆரம்ப முகாந்தரம் இல்லை’ என்று தெரிவித்தார்.
நியூஸ்@தூது 

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நிதி மோசடி:கிரண்பேடியை ஆதரிக்கும் ஹஸாரே குழு"

Post a Comment