தலைப்புச் செய்தி

Saturday, November 19, 2011

பள்ளிகளிலும் பகவத் கீதா கட்டாயம்-காவிமயமாக்கும் முயற்சி



மத்திய பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பகவத் கீதா கற்று கொடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவ்ராஹ் சிங் செளஹான் அறிவித்துள்ளார். இதற்கு அம்மாநில எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் சிறுபான்மை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பகவத் கீதா பள்ளியில் கற்று கொடுப்பது, மாநிலத்தை காவிமயமாக்கும் முயற்சி என்றும், இந்தியாவின் மத சார்பின்மை கொள்கைக்கு எதிரானது என்றும் காங்கிரஸ் கட்சியின் பத்திரிக்கை தொடர்பாளர் மானக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
எனினும் முதல்வர் சிவ்ராஜ் சிங், எதிர்கட்சிகள் மற்றும் சிறுபான்மை மக்களின் எதிர்ப்பு குறித்து கவலைப்படாமல், பகவத் கீதாவில் ஆட்சேபகரமான கருத்துக்கு இடமில்லை என்றும், ஆகவே இதற்குரிய எதிர்ப்பு தேவையில்லாதது என தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் சிவ்ராஜ் சிங், அனைத்து பள்ளிகளிலும் சூரிய வழிபாடு நடைபெறும் என கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார். மேலும் சில வாரங்களுக்கு முன் போபால் நகரின் பெயரை போஜ்பால் என மாற்ற உள்ளதாக அறிவித்து இருந்தார்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பள்ளிகளிலும் பகவத் கீதா கட்டாயம்-காவிமயமாக்கும் முயற்சி"

Post a Comment