பர்மாவின் ஜனநாயக ஆதரவுத் தலைவரான ஆங் சான் சூ சீ அந்நாடில் அடுத்த சில மாதங்களில் நடக்கக்கூடிய இடைத்தேர்தல் ஒன்றில் போட்டியிடக்கூடும் என்று அவரது கட்சி சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.
ஆங் சான் சூ சீ வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகவுள்ள நிலையில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளர்.
ஆங் சான் சூ சீ விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக சென்ற வருடம் பர்மாவில் நடந்திருந்த தேர்தலை அவரது கட்சி புறக்கணித்திருந்தது.
நேஷனல் லீக் ஃபார் டெமாக்கிரசி அதாவது ஜனநாயகத்துக்கான முன்னணி என்ற தங்களது அமைப்பை அரசியல் கட்சியாக மறுபடியும் பதிவுசெய்து கொள்வது தொடர்பில் முடிவெடுப்பதற்காக அடுத்த வாரம் கூட்டம் ஒன்றை நடக்கவுள்ளது
ஆங் சான் சூ சீ மீண்டும் அரசியலுக்குள் வர அது வழிவகுக்கும்.
சூ சீ எந்தத் தொகுதியில் போட்டியிடுவார், எந்த பதவிக்கு அவர் வர வாய்ப்புள்ள என்பது பற்றியெல்லாம் அவரது கட்சியின் சார்பாகப் பேசியவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
0 comments: on "பர்மா தேர்தலில் மீண்டும் - ஆங் சான் சூ சீ"
Post a Comment