ஸ்ரீநகர் : சமீபத்தில் அப்சல் குருவை பற்றி ஒமர் அப்துல்லா வெளியிட்ட கருத்துக்குப் பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதற்கு பதிலளித்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தான் அப்சல் குருவைப் பற்றி சொன்னது தவறென்றால் பாஜகவுக்குத் தைரியமிருந்தால் தன் மீது வழக்கு போடட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.
ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளனின் தண்டனையை குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதையொட்டி டிவிட்டரில் கருத்து தெரிவித்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இதே போன்று அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையைக் குறைக்கும் தீர்மானத்தைக் காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தால் இதே போல் அமைதி காக்குமா தேசம் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
உமர் அப்துல்லாவின் கருத்துகளைக் கடுமையாக கண்டித்த பாஜக இது தவறான முன்னுதாரனம் என்றும் குறிப்பிட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த உமர் அப்துல்லா தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களைத் தவிர பாஜக உள்ளிட்ட யாரும் தன் குரலை அடக்க முடியாது என்றும் தான் இந்நாட்டின் குடிமகன் எனும் முறையில் கருத்து சொல்லும் சுதந்திரம் உள்ளது என்றும் கூறினார். மேலும் தன் கருத்து தவறென்றால் தன் மீது பாஜக வழக்கு தொடரட்டும் என்றார்.
0 comments: on "பாஜகவுக்கு தைரியமிருந்தால் வழக்கு போடவும்-உமர் அப்துல்லா சவால்"
Post a Comment