கடும் விலைவாசி உயர்வை கண்டித்து இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். லிபியா, சிரியா போன்ற நாடுகளில் அதிபர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பொருளாதார சீரழிவே அங்கு போராட்டத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதே நிலை தற்போது இஸ்ரேலிலும் ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாகவும் அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி தலைநகர் டெல்அவில் நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 3 லட்சம் பேர் கூடி போராட்டம் நடத்தினார்கள். அதை அரசு கண்டு கொள்ள வில்லை. மாறாக சமூக பொருளாதார சீரமைப்பு நிபுணர்கள் கமிட்டியை பிரதமர் பெஞ்சமின் நேடன்யாரு அமைத்தார். அதனால் எந்த பயணம் ஏற்பட வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று தெருக்களில் வந்து போராட்டம் நடத்தினார்கள்.
டெல்அவில், ஜெருச லேம் உள்ளிட்ட நகரங்களில் பொது மக்கள் திரண்டனர். இப்போராட்டத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பிரதமருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். இதனால் போராட்டம் மிகவும் கொந்தளிப்பாக இருந்தது. இது ஒரு 2-வது சுதந்திர தினவிழா என போராட்டத்துக்கு தலைமை வகித்த யோனாதன் லெவி தெரிவித்தார்.
0 comments: on "விலைவாசி கடும் உயர்வு: இஸ்ரேலிலும் போராட்டம் வெடித்தது"
Post a Comment