தலைப்புச் செய்தி

Tuesday, August 16, 2011

தடையை மீறி உண்ணாவிரதம்: கோமாளி அன்னா ஹசாரே கைது!


தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலுவான அதிகாரங்களைக் கொண்ட லோக்பால் மசோதாவை வலியுறத்தி இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக 74 வயது காந்தியவாதி அன்னா ஹசாரே அறிவித்திருந்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீசார் விதித்த 22 நிபந்தனைகளில் 16 நிபந்தகைளை மட்டும் ஹசாரே குழுவினர் ஏற்றனர். 6 நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால் அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து தடை விதித்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்துக்கு அருகில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்காவில் ஹசாரே குழுவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். நேற்று திடீரென அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பூங்கா முன்பு நூற்றுக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டன.பூங்கா அமைந்துள்ள மத்திய டெல்லி பகுதியான தர்யாகஞ்ச், ஐ.பி. போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து பூங்காவில் இருந்த ஹசாரேயின் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். உண்ணாவிரதம் இருக்க பூங்கா பகுதிக்கு யாரும் வரக்கூடாது என்று டெல்லி போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டனர்.

உண்ணாவிரதம் தொடங்கும் முன்பே போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அறிந்ததும், அன்னா ஹசாரே டெல்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்றார். சுமார் 3 மணி நேரம் தியானம் செய்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

போலீசாரின் தடை உத்தரவை மீறி உண்ணாவிரதம் தொடங்குவோம். எங்களை கைது செய்தால் நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதனால் ஹசாரே குழுவினருக்கும் போலீசாருக்கும் நேரடி மோதல் ஏற்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை உருவானது.

இந்த நிலையில் அன்னா ஹசாரே வசித்து வரும் மயூர் விசார் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் ஏராளமானவர்கள் திரண்டனர். அவர்களுடன் ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்துக்கும் புறப்பட தயாரானார். அப்போது டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகள் அன்னா ஹசாரே வீட்டுக்குள் சென்று அவரை கைது செய்தனர். அவருடன் இருந்த லோக் பால் குழு உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார்.

ஹசாரே திடீரென கைது செய்யப் பட்டதை அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு கோஷம் எழுப்பினார்கள். சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஹசாரே வீடு அருகே திரண்டு விட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

"பாரத மாதாவுக்கு ஜே, வந்தே மாதரம்" என்று ஹசாரே ஆதரவாளர்கள் எழுப்பிய குரல் அந்த பகுதியை கிடு கிடுக்க வைத்தது. இதையடுத்து அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் இருவரையும் போலீசார் சிவில் லைன் ஆபீசர்ஸ் மெஸ்சுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் தனி இடத்தில் அமர வைக்கப்பட்டனர்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தடையை மீறி உண்ணாவிரதம்: கோமாளி அன்னா ஹசாரே கைது!"

Post a Comment