தலைப்புச் செய்தி

Thursday, August 18, 2011

சுதந்திர தின அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்த காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


நெல்லை:முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000-க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகங்கள் பல செய்த முஸ்லிம் சமுதாயத்திற்கு சுதந்திர தினத்தை கொண்டாடவும் அவர்களின் தியாகங்களை நினைவுகூறவும் அனுமதி மறுத்த தமிழக அரசு மற்றும் காவல்துறையின் சிறுபான்மையினருக்கெதிரான போக்கினை கண்டித்து  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகஸ்ட்-17 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்தது.
அதன் ஒரு பகுதியாக இன்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தைமுக்கில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுமார் 2000 திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்ட இந்த ஆர்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் எம்.அன்வர் முஹைதீன் தலைமை தாங்கினார்.
இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில், SDPI ன் மாநிலத் தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாக்கவி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநிலத் துணைத் தலைவி பாத்திமா ஆலிமா, விடுதலை சிறுத்தை கட்சியின் நெல்லை மாவட்ட செயாலாளர் M.C.கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்ட தமிழக அரசு மற்றும் காவல்துறையினருக்கு எதிரான தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சுதந்திர தின அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்த காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்"

Post a Comment