ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வற்புறுத்தி கோமாளிவாதி அன்னா ஹசாரே நாளை (16-ந்தேதி) முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்குகிறார். டெல்லியில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயணன் பூங்காவில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் 3 நாட்கள் மட்டுமே அனுமதி உள்பட 22 நிபந்தனைகளை டெல்லி போலீசார் கோமாளி அன்னா ஹசாரே குழுவிற்கு விதித்த னர். 5 ஆயிரம் பேர் மட்டுமே உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும், 3 நாட்கள் மட்டும்தான் அனுமதி அளிக்கப்படும் என்பது உள்பட போலீசார் விதித்த 6 நிபந்தனைகளை கோமாளி அன்னா ஹசாரே குழுவினர் ஏற்கவில்லை. 6 நிபந்தனைகளை ஏற்காததால் டெல்லி போலீசார் கோமாளி அன்னாஹசாரே உண்ணா விரத போராட்டத்துக்கு இன்று அனுமதி மறுத்தனர்.
இதனால் போலீசாரின் தடயை மீறி கோமாளி அன்னா ஹசாரே குழுவினர் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஹசாரே குழுவினர் ஏற்கனவே டெல்லியில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் சுதந்திர தின கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மன்மோகன் சிங் கோமாளி அன்னா ஹசாரே குழுவை சாடினார். கடுமையான லோக்பால் சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும், உண்ணாவிரதம் தீர்வாகாது, அதனால் ஊழல் ஒழிந்து விடாது என்றும் கூறினார்.
0 comments: on "கோமாளி அண்ணா ஹசாராவை அப்படியே விட்டு விட்டால் என்ன"
Post a Comment