பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மேலப்பாளையத்தில் 2ஆவது நாளாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலப்பாளையத்தில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் நேற்று சுதந்திரதின அணிவகுப்பு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஜின்னா திடலில் துவங்கி ஆமீன்புரம் 7வது தெரு வரை அணிவகுப்பு நடத்த அவர்கள் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. மேலும் நேற்றிரவு ஆமின்புரத்தில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கும் காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர்.
இந்நிலையில் தடையை மீறி அவர்கள் அணிவகுப்பு நடத்தலாம் என்பதால் அங்கு ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலப்பாளையத்திற்கு வரும் அனைத்து சாலைகளிலும் பேரிகார்டு அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டது.
இதுதவிர மாநகரத்தில் உள்ள அனைத்து செக்போஸ்ட்களிலும் விடியவிடிய சோதனை நடந்தது. துணை ஆணையர் மார்ஸ்டன்லியோ தலைமையில் உதவி ஆணையர்கள் ராமச்சந்திரன், ஆறுமுகம் ஆகியோர் மேற்பார்வையில் மேலப்பாளையம் பஜார், விஎஸ்டி ஜங்ஷன், ஜின்னாதிடல் உள்ளிட்ட பகுதிகளில் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பள்ளிவாசல்கள், கோயில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களுக்கும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றும் இந்த பாதுகாப்பு தொடர்ந்தது. போலீசார் அங்கேயே முகாமிட்டு ரோந்து சுற்றி வந்தனர்.

0 comments: on "மேலப்பாளையத்தில் 2வது நாளாக போலீஸ் குவிப்பு"
Post a Comment