உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தமிழ் நாடு அரசு இன்னும் 10 தினங்களுக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை விநியோகித்து முடிக்க வேண்டும் என்றும், உடனே சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது. சமச்சீர் கல்விக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் தரம் குறைவானது என்று கூறீ ஆதிமுக அரசு இந்த திட்டத்தை நிறுத்தி வைத்தது. இதனை பலரும் எதிர்த்து வந்தனர். இதன் அடிப்படையில் இதன் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றத்தில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று தமிழ அரசுக்கு ஆணை பிறப்பித்தது இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் பல்வேறு மாணவ இயக்கங்களால் போராட்டங்கள் நடைபெற்றன. உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்ற உத்தரவையே நடைமுறைப்படுத்த ஆணையிட்டது. இது மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். நியாயமான கோரிக்கையின் மூலமாகவும், போராட்டத்தின் மூலமாகவும் வெற்றி பெற்ற மாணவர்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மனமாற பாராட்டுகிறது.

0 comments: on "சமச்சீர் கல்வியை போராடி பெற்ற மாணவர்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்டின் வாழ்த்துக்கள்"
Post a Comment