குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புணேயைச் சேர்ந்தவர் ஹசன் அலி (53). இவர் குதிரைப்பண்ணை அதிபர். இவர் மீது வரி ஏய்ப்பு, சட்ட விரோத பண பரிமாற்ற செயல்களில் ஈடுபட்டதாக அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று ஹசன் அலி சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்குரைஞர் மனு தாக்கல் செய்யதிருந்தார். அதில் தம்மீது அமலாக்க பிரிவு அதிகாரிகள் சட்ட விரோத பண பரிமாற்றம் சட்டப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என தெரிவித்திருந்தார். இதன் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நீதிபதி ஏ.எம். திப்சே முன் வந்தது.

நிபந்தனை ஜாமீன்... இருதரப்பு வாதங்களையும் கேட்ட அவர் ஹசன் அலிக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். மும்பை அல்லது புணேயில் தங்கியிருந்து,தினமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அவர் வெளிநாடு செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டார். உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்வதற்கு வசதியாக, ஜாமீன் உத்தரவை 1 வாரத்துக்கு தள்ளி வைக்க கூடுதல் சொலிட்டார் ஜெனரல் தாரியஸ் கம்பாட்டா கோரிக்கை விடுத்தார். இதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். அவர் சாட்சியங்களை கலைப்பார், அல்லது தலைமறைவாகிவிடுவார் என்பதற்கு ஆதாரம் இல்லை. எனவே ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என நீதிபதி குறிப்பிட்டார்.
இதனிடையே, மும்பை அமர்வு நீதிமன்றத்தில் இருந்த ஹசன் அலியிடம் அவருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய தகவல் சொல்லப்பட்டது. சிறிது நேரத்தில், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அவரது வழக்குரைஞர் கூறினார். நீதிமன்றக் காவலை நீட்டிப்பதற்காக ஹசன் அலி மும்பை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். 6 பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்தது உள்பட மேலும் சில வழக்குகள் ஹசன் அலி பதிவாகிஉள்ளன.
0 comments: on "நீதிமன்றத்தில் மயங்கிவிழுந்தார் ஹசன் அலி"
Post a Comment