தலைப்புச் செய்தி

Saturday, August 13, 2011

அஃபசல் குருவின் மரண தண்டனையை நிறைவேற்ற மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னரிடம் கோரிக்கை

பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் அஃப்சல் குருவை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என ஆளுனரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர்ம் மாதம் நிகழ்ந்த பாராளுமன்றத் தாக்குதலின் போது தாக்குதலில் ஈடுபட்ட 5 திவீர்வாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 30 நிமிடத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த தாக்குதலின் போது 13 இராணுவ வீரர்கள் படுகாயமுற்றனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்திற்கும் தொடர்பு உண்டு என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் காஷ்மீரைச் சேர்ந்த அஃப்சல் குரு என்கின்ற இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் அஃப்சல் குருவிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. இதனை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது உச்ச நீதிமன்றமும் அஃப்சல் குருவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.


அஃப்சல் குருவின் மனைவி அஃப்சானா ஆளுனர் பிரதீபா பாட்டிலிடம் தனது கணவரை கருணை அடிப்படையில் மரண தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனு ஆளுனரின் மேற்பார்வையில் உள்ளது. தற்போது எதிர்கட்சிகளின் பாராளுமன்ற விவாதத்தின் போது அஃப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என மத்திய அரசை நிர்பந்தித்து வந்தது. இதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் மரண தண்டனையை நிறைவேற்ற ஆளுனடர் பிரதீப்பா பாட்டிலிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளது. ஆளுனர் பிரதீப்பா பாட்டில் இன்னும் சில தினங்களில் இது சம்பந்தமான இறுதி முடிவை எடுப்பார் என்று தெரிகிறது.

அஃப்சல் குருவுக்கு எந்த தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லை என்றும் அவர்தான் பாராளுமன்ற தாக்குதலில் நேரடியாக் ஈடுபட்டார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இருந்த போதிலும் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை அதே உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "மனித நீதிப் பாசறை"யாக செயல்பட்ட போது தமிழகம் முழுவது "அஃப்சல் குருவை தூக்கிலடக்கூடாது! ஏன்?" என்ற தலைப்பில் மாபெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அஃபசல் குருவின் மரண தண்டனையை நிறைவேற்ற மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னரிடம் கோரிக்கை"

Post a Comment