தலைப்புச் செய்தி

Sunday, August 14, 2011

ஆட்டம் காணும் பொருளாதார நிலை:உலக வங்கி தலைவர் எச்சரிக்கை

உலக பொருளாதாரத்தில் காணப்படும் ஸ்திரத்தன்மையற்ற போக்கால், பல ஆபத்தான கட்டங்களை எதிர்நோக்கும் அபாயம் இருக்கிறது," என்று உலக வங்கி தலைவர் ராபர்ட் ஸோயலிக் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தின் ரேட்டிங்கை, கடந்த வாரம் ஸ்டான்டர்டு அன்ட் புவர் நிறுவனம் குறைத்து அறிவி்த்தது. இதன் எதிரொலியால் சர்வதேச பங்கு சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.

போதாக்குறைக்கு ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொருளாதார நிலையிலும் சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால், அடுத்த பொருளாதார சரிவை உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன.

இந்த நிலையில், உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஸோயலிக் ஆஸ்திரேலியாவின் பிரபல செய்தித்தாள் வீக்ண்டுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"தற்போது நாம் புதிய பொருளாதார சரிவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். ஆனால், இது கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவு போன்று இருக்காது.

கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஓரளவுக்கு வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளன. ஆனால், வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கியுள்ளன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஆட்டம் காணும் பொருளாதார நிலை:உலக வங்கி தலைவர் எச்சரிக்கை"

Post a Comment