லோக்பால் மசோதா விவகாரத்தில் அன்னா ஹஸாரே போராட்டம் நடத்தவுள்ளது நியாயமற்றது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறுகையில், "எல்லோருக்குமே போராடும் உரிமை உண்டு. ஆனால், அந்தப் போராட்டத்துக்குரிய சூழல் மற்றும் காரணம் குறித்து அது தேவையா அல்லது தேவையற்றதா என்பதை முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.
லோக்பால் மசோதாவே தாக்கல் செய்யப்படவில்லை என்றால் போராடுவது நியாயம். ஆனால், நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யும்போது, அதையொட்டி போராட்டம் மேற்கொள்வது நியாயமற்றது என்றும் அவர் கூறினார்.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தொடர்பான பல்வேறு கருத்துகளை நாடாளுமன்ற நிலைக்குழுவும், எதிர்கட்சிகளும் அளித்துள்ளன. அவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் சிதம்பரம் கூறினார்.

0 comments: on "அன்னா ஹஸாரே போராட்டம் நியாயமற்றது: ப.சிதம்பரம்"
Post a Comment