தலைப்புச் செய்தி

Saturday, August 27, 2011

ஹஸாரே:ஊடகங்களின் இரட்டை வேடம்-அருணாச்சல் பிரதேச மாணவர் யூனியன் கண்டனம்

ஹஸாரேவின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பரப்புரை செய்யும் தேசிய ஊடகங்கள் இரட்டை கொள்கையை பின்பற்றுவதாக ஆல் அருணாச்சல பிரதேஷ் ஸ்டுடண்ட்ஸ் யூனியன் (எ.எ.பி.எஸ்.யு) குற்றம் சாட்டியுள்ளது.


வடகிழக்கு மாநிலங்களில் அமுலில் உள்ள கொடிய ராணுவச்சட்டத்திற்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் மணிப்பூரைஸ் சார்ந்த இரோம் ஷர்மிளாவுக்கு அளிக்காத ஆதரவை ஊடகங்கள் ஹஸாரேவை தேசிய ஹீரோவாக மாற்றிக்காட்டுவதாக யூனியனின் தலைவர் தகம் தருங் குற்றம் சாட்டுகிறார்.


ஹஸாரேவின் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். அதே வேளையில் ஹஸாரேவின் போராட்டத்தை விட முக்கியத்துவம் குறைந்ததல்ல இரோம் ஷர்மிளாவின் போராட்டம் என அவர் கூறினார். வடகிழக்கு மாநிலங்களில் அமுலில் இருக்கும் கொடிய ராணுவ சட்டத்திற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் ஷர்மிளாவும் மக்களுக்கு வேண்டிதான் போராடுகிறார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஹஸாரே:ஊடகங்களின் இரட்டை வேடம்-அருணாச்சல் பிரதேச மாணவர் யூனியன் கண்டனம்"

Post a Comment