அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை, ஆண்டு தோறும் கருத்து கணிப்பு நடத்தி உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அது போன்ற நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளை போர்ப்ஸ் பத்திரிகை இப்போது வெளியிட்டுள்ளது. உலகின் பலம் வாய்ந்த 100 பெண்களை அந்த பத்திரிகை வரிசைப்படுத்தி உள்ளது.
அதன்படி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 7-வது இடத்தில் உள்ளார். ஊழல் பிரச்சினைகள் பூதாகரமாக இருந்தாலும் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் சோனியாவின் பங்கு மிகவும் முக்கியத்தும் பெறுவதாக, அந்த பத்திரிகை பாராட்டி இருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை இவர் பின்னுக்கு தள்ளி விட்டார். அவருக்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. ஜெர்மன் நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு 2-ம் இடத்தை அந்த பத்திரிகை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு இவர் 5-வது இடத்தில் இருந்தார்.
இப்போது 3 இடம் முன்னேறி உள்ளார்.
பிரேசில் நாட்டின் முதல் பெண் அதிபரான டில்மா ரவுஸெப் 3-ம் இடத்தில் உள்ளார். அமெரிக்க இந்தியரும் பெப்சி குளிர்பான நிறுவனத்தின் தலைவருமான இந்திரா நூயி 4-வது இடத்திலும், பேஸ் புக் தலைமை அதிகாரி ஷெரில் சான்ட் பெர்க் 5-வது இடத்திலும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசனின் துணை தலைவர் மெலிண்டா கேட்ஸ் 6-வது இடத்திலும் வருகின்றனர்.
சோனியா காந்தி தவிர மேலும் இரண்டு இந்திய பெண்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் அதிகாரி சந்திரா கோச்சார், (43-வது இடம்) பைகான் நிறுவன தலைவர் கிரண் மசூம்தார் (99-வது இடம்) ஆகியோர் ஆவார்கள்.
0 comments: on "உலகின் சக்தி வாய்ந்த பெண்மணி: சோனியாவுக்கு 7-வது இடம்"
Post a Comment