தலைப்புச் செய்தி

Saturday, August 6, 2011

ஹிந்துத்துவா ஒரு தேசிய அபாயம்! ப. சிதம்பரம்!


ஹிந்துத்துவா வலதுசாரித் தீவிரவாதக் குழுக்கள் ஆபத்து நிறைந்த வையாகும். எனவே வலதுசாரித் தீவிரவாத்துக்கு எதிராகவும் உறுதியுடனும் அச்சப்படாமலும் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

ஹிந்துத்துவா வலதுசாரித் தீவிரவாதமும் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு உள்நாட்டு எதிரியுமாகும். அதை எதிர்நோக்கும் வகையில் உளவுப் பணிகளைப் பாதுகாப்புப் படையினர் வலுப்படுத்த வேண்டும். அவ்வாறான தீவிரவாதம் உருவாகக் காரணமானவற்றைக் கண்டறிந்து அவற்றைக் களைய பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இணையதளம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இளைஞர்களைத் தங்கள் இயக்கத்தில் சேர்க்க ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. பல கட்டங்களில் எதிரிகளை நம்மால் எளிதில் அடையாளம் காணமுடிவதில்லை. எனவே சாதாரண மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மற்றும் அதன் துணை அமைப்புகள் உலெகெங்கும் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. இவை இந்தியாவின் ஒற்றுமையை குலைத்து மத துவேசத்தை ஏற்ப்படுத்தி இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி தள்ளும் சக்திகளாக செயல்பட்டு வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஹிந்துத்துவா ஒரு தேசிய அபாயம்! ப. சிதம்பரம்!"

Post a Comment