ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிலவும் கடும் பஞ்சத்துக்கு கடந்த 90 நாள்களில் மட்டும் 29,000 குழந்தைகள் இறந்துள்ளர். இவர்கள் அனைவருமே 5 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சோமாலியாவில் பஞ்சம் பாதித்தப் பகுதியாக புதிய 3 பகுதிகளை ஐ.நா. புதன்கிழமை அறிவித்தது. அங்கு வசிக்கும் 7.5 லட்சம் மக்களில் 3.5 லட்சம் மக்களின் உயிரைக் காக்க உடனடியாக உதவ வேண்டிய சூழல் உள்ளது என்றும் ஐ.நா. கூறியிருந்தது.
இந்நிலையில் அந்நாட்டில் பஞ்சத்தின் பிடியில் சிக்கி 29,000 குழந்தைகள் இறந்துள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
சோமாலியாவில் பஞ்சம் பாதித்தப் பகுதியாக புதிய 3 பகுதிகளை ஐ.நா. புதன்கிழமை அறிவித்தது. அங்கு வசிக்கும் 7.5 லட்சம் மக்களில் 3.5 லட்சம் மக்களின் உயிரைக் காக்க உடனடியாக உதவ வேண்டிய சூழல் உள்ளது என்றும் ஐ.நா. கூறியிருந்தது.
அமெரிக்காவின் சேவைத் துறை அதிகாரி நான்ஸி லின்பர்க், அந்நாட்டின் நாடாளுமன்றக் குழுவுக்கு அளித்த அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.

0 comments: on "சோமாலியாவில் 29,000 குழந்தைகள் இறந்துள்ளர்"
Post a Comment