ஆப்கானிஸ்தானில் வார்டெக் மாநிலத்தில் சயத் அபாத் மாவட்டத்தில் தலீபான்கள் மீதான நடவடிக்கையில் ஈடுபட்ட நேட்டோ ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்தது. இதில் 31 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானார்கள். அவர்களுடன் 7 ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களும் இறந்தனர்.
இந்த தகவலை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்சாயின் அலுவலகம் தெரிவித்து உள்ளது. ஹெலிகாப்டர் தரையில் விழுந்ததில் 31 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானதற்கு கர்சாய் தன் அனுதாபத்தை தெரிவித்து கொண்டார்.





0 comments: on "ஆப்கானிஸ்தானில் நேட்டோ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 31 பேர் பலி"
Post a Comment