தலைப்புச் செய்தி

Monday, August 15, 2011

சுதந்திர தின அணிவகுப்பு நடத்த பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவுக்கு தடை

சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மேலப்பாளையத்தில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் சுதந்திரதின அணிவகுப்பு ஆகஸ்டு 15ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. மேலும் இன்று அவர்கள் சார்பில் ஆமின்புரத்தில் நடத்தப்பட உள்ள பொதுக்கூட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் தடையை மீறி அவர்கள் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தலாம் என மேலப்பாளையத்தில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. இதையட்டி அங்கு சுமார் ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி வெளிமாவட்டங்களிலிருந்து மேலப்பாளையத்திற்குள் நுழையும் நபர்களை விசாரணை செய்ய காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக் கிழமை காலை குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டிலிருந்து பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் பொதுக்கூட்ட  நோட்டீசுடன் வந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த அணிவகுப்பு காரணமாக நெல்லையிலுள்ள பள்ளிவாசல்கள், கோயில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு பலத்த காவல் போடப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சுதந்திர தின அணிவகுப்பு நடத்த பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவுக்கு தடை"

Post a Comment