தலைப்புச் செய்தி

Saturday, August 27, 2011

அரசை மிட்டுவது காந்தியவாதிக்கு அழகல்ல-அக்னிவேஷ்

டெல்லி: உண்ணாவிரதம் நீடிப்பது தொடர்பாக அன்னா ஹஸாரே குழுவில் பெரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அரசை மிட்டுவது காந்தியவாதிக்கு அழகல்ல என்று கூறிய அந்தக் குழுவின் முக்கிய உறுப்பினர் சந்தோஷ் ஹெக்டே பதவி விலகிவிட்டார்.

உண்மாவிரதத்தை நீடிப்பது சரியல்ல. அதை முடிப்பதற்கான நல்ல வாய்ப்பை அன்னா ஹஸாரே தவறவிட்டுவிட்டார் என்று மற்றொரு முக்கிய உறுப்பினர் சுவாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார். அவரும் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடு

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் நீடிப்பது தொடர்பாக அவரது குழுவில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. அக்குழுவை சேர்ந்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி வருகிறார்.

பாராளுமன்றம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது ஜனநாயகம் அல்ல என்றும், ஹசாரே குழுவில் நடக்கும் சம்பவங்களால் நான் இனிமேல் அக்குழுவில் இருக்க முடியாது என்றும் அவர் கூறி விலகியுள்ளார்.

இதுபோல், சுவாமி அக்னிவேஷ் கூறுகையில், பாராளுமன்றம் நாளையே இதைச் செய்ய வேண்டும் என்று அச்சுறுத்தல் விடுப்பது காந்தியவாதிக்கு அழகல்ல என்றும், எனவே, அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி அக்னிவேஷ்

மற்றொரு முக்கிய உறுப்பினரான சுவாமி அக்னிவேஷ் கூறுகையில், "போராட்டத்தை முடித்துக் கொள்ள அன்னா ஹஸாரேவுக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பம் வாய்த்தது. ஆனால் அதை அவர் நழுவவிட்டுவிட்டார்.

அன்னா என்ன செய்ய வேண்டும், எதுவரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதை ஒரு சிறுகுழுதான் தீர்மானிக்கிறது. இதனால் அன்னாவின் நம்பகத்தன்மைக்கு பங்கம் வந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்தபோது, எங்கள் நோக்கம் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்துவது மட்டுமே. ஆனால் இப்போது அந்த நோக்கம் மாறிப்போயிருக்கிறது. எனவே இந்தக் குழுவிலிருந்து என்னை விலக்கிக் கொள்கிறேன்.

மேலும் இந்தக் குழு சிறுபான்மையினர், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஒன்றாக மாறிவிட்டது. அவர்களுக்கு இந்தக் குழுவிலும் எந்த முக்கியத்துவமும் இல்லை. பாராளுமன்றத்தை அதிகாரம் செலுத்தும் அளவுக்கு இந்தக் குழு நடந்து கொள்வது சரியல்ல," என்றார்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே எஸ் வர்மாவும் உண்ணாவிரதத்தை நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னாவுக்கு கடிதம் எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அரசை மிட்டுவது காந்தியவாதிக்கு அழகல்ல-அக்னிவேஷ்"

Post a Comment