தலைப்புச் செய்தி

Wednesday, August 10, 2011

பாலிக்ராஃப் சோதனைக்கு தயார் – மலேகான் குண்டுவெடிப்பில் அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்


மும்பை:தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க பாலிக்ராஃப் டெஸ்ட்(பலமுனை வரைவி சோதனை), ப்ரெயின் மேப்பிங் உள்ளிட்ட உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஒன்பது பேர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என என்.ஐ.ஏ கடந்த வாரம் மோக்கா சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸிடமிருந்து இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தங்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பங்கினைக் குறித்து அறிய விஞ்ஞான ரீதியிலான சோதனை தேவை என என்.ஐ.ஏவின் வழக்கறிஞர் ரோஹினி ஸாலியன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஞ்ஞானரீதியிலான பரிசோதனைக்கு தயார் என குற்றஞ்சாட்டப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் சார்பாக அவர்களது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அறிவித்தார். தங்களது நிரபராதி தன்மையை தெளிவாக்கிய பிறகும் முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச்செய்ய மறுப்பு தெரிவிக்கும் அதிகாரிகளின் நிலைபாட்டிற்கு எதிராக எதிர்ப்பு அதிகரித்துவருகிறது.
News@thoothu

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பாலிக்ராஃப் சோதனைக்கு தயார் – மலேகான் குண்டுவெடிப்பில் அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்"

Post a Comment