தலைப்புச் செய்தி

Thursday, May 12, 2011

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: எஸ்ஸார் நிறுவன அதிகாரி சி.பி.ஐ. முன் ஆஜர்


2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் எஸ்ஸார் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பிரசாந்த் ருயியா டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ஆஜர் ஆனார். அவரிடம் ஏற்கனவே ஒரு முறை சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ள நிலையில் நேற்று 2-வது கட்டமாக விசாரணை நடந்தது.
 
ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் பெற்ற லூப் டெலிகாம் நிறுவனத்துடன் எஸ்ஸார் நிறுவனத்துக்குள்ள தொடர்பு குறித்து பிரசாந்த் ருயியாவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. வோடாபோன்- எஸ்ஸார் கூட்டு நிறுவனத்தின் 33 சதவீத பங்குகள் எஸ்ஸார் நிறுவனத்திடம் உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக இந்த நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: எஸ்ஸார் நிறுவன அதிகாரி சி.பி.ஐ. முன் ஆஜர்"

Post a Comment