தலைப்புச் செய்தி

Saturday, May 14, 2011

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா?

2ஜி அலைக்கற்றை வழக்கில் தம்மைக் கைது செய்யாமல் இருக்கக்கோரி திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி தாக்கல் செய்ய மனு மீது தில்லி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு வழங்க இருக்கிறது.



2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் கனிமொழியைக் கூட்டுச் சதியாளர் என்று குறிப்பிட்டுள்ளது. கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



இதையடுத்து தாங்கள் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டோர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேட்மலானி ஆஜரானார். கலைஞர் டி.வி.யில் வெறும் பங்குதாரராக இருப்பதால் மட்டும் கனிமொழியைக் குற்றம்சாட்ட முடியாது என்று அவர் வாதிட்டார்.



ஆனால், கலைஞர் டி.வி.க்கு கைமாற்றப்பட்ட ரூ.200 கோடி பணம் லஞ்சமேயன்றி வேறில்லை. டி.வி.யின் நடவடிக்கைகளை குடும்பமே கண்காணித்து வந்த நிலையில், சரத்குமாரை மட்டும் குற்றத்துக்குப் பொறுப்பாக்க முடியாது என்று சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் யூ.யூ.லலித் வாதிட்டார். இதையடுத்து, கடந்த 7-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, 14-ம் தேதிக்கு (சனிக்கிழமை) தீர்ப்பை ஒத்திவைத்தார்.



அதன் பிறகு அதே நீதிமன்றத்தில் நடந்த 2ஜி வழக்கு விசாரணையின்போது கனிமொழி தினமும் ஆஜராகி வந்தார். வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராவதற்காக கடந்த இரு நாள்களும் தில்லி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது சனிக்கிழமை தெரிந்துவிடும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா?"

Post a Comment