தலைப்புச் செய்தி

Thursday, May 12, 2011

ஸ்பெயினில் பயங்கர நிலநடுக்கம்-10 பேர் பலி; கட்டிடங்கள் நொறுங்கின


ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லோர்கா நகரில் நேற்றிரவு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிக்கு அந்த நில நடுக்கத்தின் தாக்கம் இருந்தது.   பூமியில் 10 கிலோ மீட்டர் ஆழத்துக்குள் அந்த பூகம் பத்தின் மையப் புள்ளி இருந்தது. இதனால் லோர்கா நகரமே குலுங்கியது.
 
அடுக்கு மாடி கட்டிடங்கள் இடிந்து நொறுங்கி விழுந்தன. மக்கள் அலறி அடித்தப்படி வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் திரண்டனர். பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடம் தேடி ஓடினார்கள். கட்டிடங்கள் நொறுங்கியதால் லோர்கா நகரம் முழுவதும் கதறல் சத்தம் கேட்டது.
 
சிறிது நேரத்தில் லோர்கா புறநகர் பகுதியை மையமாக கொண்டு மீண்டும் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் 4.4 ரிக்டர் அளவு கோலாக இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் மேலும் சில கட்டிடங்கள் நொறுங்கின. இடிபாடுகளில் சிக்கி 10 பேர் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக் கானவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
ஸ்பெயின் நாட்டில் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கத்தின் அதிர்வுகளை தலைநகர் மாட்ரிட் வரை உணர முடிந்ததாக மக்கள் கூறினார்கள். நிலநடுக்கம் காரணமாக ஸ்பெயின் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதமும், இழப்பும் ஏற்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஸ்பெயினில் பயங்கர நிலநடுக்கம்-10 பேர் பலி; கட்டிடங்கள் நொறுங்கின"

Post a Comment