சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 50 நாட்களாக நடந்து வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
இப்போராட்டத்தில் இதுவரை 800 பேர் பலியாகி உள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். எனவே, போராட்டத்தை அடக்க அதிபர் ஆசாத் ராணுவ டாங்கிகளை பயன்படுத்தி வருகிறார்.
சிரியாவின் 3-வது பெரிய “ஹோம்ஸ்” நகருக்குள் டாங்கி படைகள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இது தலைநகர் டமாஸ்கஸ்சில் இருந்து 165 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
இங்கும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஹோம்ஸ் நகரை சுற்றியுள்ள பாப் செபா, பாப் அம்ரோ, தல் அல்-சோர்ம் மாவட்டங்களில் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் காயம் அடைந்த பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





0 comments: on "சிரியாவில் கலவரம் நீடிப்பு:டாங்கிகள் மூலம் ராணுவம் தாக்குதல்"
Post a Comment