கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணையில் குளித்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கடையநல்லூர் மக்காநகர் அல்அமீன் தெருவைச் சேர்ந்தவர் பீர்முகம்மது. இவரது முகம்மது சதாம் (21) பி.எஸ்சி. பயோடெக்னாஜி படித்து வந்தா. கடந்த 8ந்தேதி இவர் தனது நண்பர்களுடன் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணைக்கு குளிக்க சென்றார். திடீரென அவர் மாயமானார். இதுகுறித்து நண்பர்கள் முகம்மது சதாம் குடும்பத்திற்கும் கடையநல்லூர் போலீசாருக்கும்தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை சதாமின் உடல் அணை கரையில் மிதந்தது. உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.




0 comments: on "கடையநல்லூர் அருகே மாணவர் மரணம்"
Post a Comment