தலைப்புச் செய்தி

Tuesday, May 10, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம்: கனிமொழிக்கு கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து 2 நாட்கள் விலக்கு


2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடு குறித்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்கும்படி கனிமொழி சார்பில், பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி மனு தாக்கல் செய்து வாதாடினார். அந்த மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், அதன்மீதான தீர்ப்பை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
 
இந்நிலையில் தினமும் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு கனிமொழி  கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் .இதனைதொடர்ந்து இன்று டெல்லி கோர்ட் இருவருக்கும் மே 12 மற்றும் 13   ஆகிய தேதிகளில் கோர்ட் முன்  ஆஜராகவிலிருந்து விலக்கு அளித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "2ஜி ஸ்பெக்ட்ரம்: கனிமொழிக்கு கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து 2 நாட்கள் விலக்கு"

Post a Comment