தலைப்புச் செய்தி

Wednesday, May 11, 2011

+2 தேர்வில் புழல் சிறைக்கைதிகள் சாதனை!


பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சிலர் +2 தேர்வுகளை எழுதினர். தேர்வு எழுதிய 23 கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சத்யன் என்ற ஆயுள் தண்டனைக் கைதி 901 மார்க் எடுத்து கைதிகளிலேயே முதலிடம் பெற்றுள்ளார்கள்.இவர்கள் அனைவருமே தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினர்.

இந்தக் கைதிகளுக்கு பாடம் நடத்துவதற்காக சிறை அதிகாரிகள் சண்முக சுந்தரம்,ஜெயராமன் தலைமையில் ஒரு குழு அமைத்து பாடம் சொல்லித் தரப்பட்டது. கைதிகள் அனைவருமே பாஸ் செய்திருப்பது சிறை அதிகாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.கைதிகளுக்குப் பாடம் நடத்தியவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளே என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பாடத்திற்கு மட்டும் வெளியிலிருந்து ஆசிரியரை வரவழைத்து பாடம் சொல்லிக் கொடுத்துள்ளனர்.

புழல் சிறை கைதிகளிலேயே அதிக மதிப்பெண் பெற்ற ஆயுள் தண்டனைக் கைதி ஆவார்.901/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.மேல் படிப்பு படிக்கவும் விரும்பம் தெரிவித்துள்ளதால் அதற்கான உதவிகளும் செய்து தரப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புழல் சிறையில் 4 பெண்களும், 19 ஆண்களும் பிளஸ்டூ தேர்வுகளை சிறை வளாகத்திலேயே எழுதியிருந்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "+2 தேர்வில் புழல் சிறைக்கைதிகள் சாதனை!"

Post a Comment