தலைப்புச் செய்தி

Wednesday, May 11, 2011

அரசு மரியாதையுடன் டோர்ஜி காண்டு உடல் தகனம்

சலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.



அருணாசலப்பிரதேச மாநிலம் தவாங் மாவட்டத்திலுள்ள ஷெப்டுங்கில் காண்டுவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த இறுதி அஞ்சலியில் 7000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மக்களால் "சிரிக்கும் புத்தர்' என்று அன்போடு அழைக்கப்பட்டவர் காண்டு.



இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடனும், மோன்பா பாரம்பரியத்தின்படியும் நடைபெற்றன. முன்னதாக காண்டுவின் இல்லத்தில் அவரின் உடலுக்கு மாநில முதல்வர் ஜர்போம் காம்லின், சபாநாயகர் வாங்லிங் லொவாடாங், அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.



டோர்ஜி காண்டுவின் வாழ்க்கையையும், பல்வேறு சாதனைகளையும் நினைவு கூர்ந்த முதல்வர் காம்லின் தனது இரங்கல் அறிக்கையில் கூறியதாவது: இந்த நாள் அருணாசலப்பிரதேசத்தின் துக்கமான நாள். நவீன அருணாசலப்பிரதேசத்தின் முன்னோடி காண்டு. மாநில மக்களாலும் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்தாலும் விரும்பப்பட்ட அவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை நம்பமுடியவில்லை. கருணை மிக்க ஒரு சகோதரரை இழந்துவிட்டேன். நாடு ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டது. அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக மனிதநேயம் மிக்க நல்ல மனிதர். காண்டுவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை எவராலும் நிரப்ப இயலாது. அவர் விட்டுச் சென்ற செயல்களை பின்பற்றுவோம் என்று கூறினார். தவாங் புத்த விகாரையின் தலைமைபிக்கு ரின்போச், மோன்பா மொழியிலான இரங்கல் செய்தியைப் படித்தார்.


 

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அரசு மரியாதையுடன் டோர்ஜி காண்டு உடல் தகனம்"

Post a Comment