ஓட்டு எண்ணப்படும் நாளான வரும் 13-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளினை முன்னிட்டு (மே 13-ந் தேதி) தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகள் அதனைச் சார்ந்த பார்களை கண்டிப்பாக மூடிட வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்படுகிறது. அதையும் மீறி மதுபானம் விற்பனை செய்தால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.





0 comments: on "வரும் 13-ந் தேதி அனைத்து மதுக்கடைகள், பார்களை மூட அரசு உத்தரவு"
Post a Comment