தலைப்புச் செய்தி

Tuesday, May 10, 2011

நிதாரி வழக்கு: தூக்குத் தண்டணையை எதிர்த்து கருணை மனு


உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டா அருகே நிதாரி கிராமத்தில் சிறுமிகள், பெண்கள் உள்பட 19 பேர் கற்பழித்து கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் தொழிலதிபர் மொகிந்தர் சிங் பந்தேர், அவரது வீட்டு வேலைக்காரர் சுரீந்தர் கோலி ஆகியோரை கைது செய்தனர்.
 
பின்னர் காஸியாபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த காஸியாபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
 
இதனை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் மொகீந்தர் சிங்கை விடுதலை செய்தது. ஆனால் சுரீந்தர் கோலியை விடுவிக்கவில்லை.
 
இதனைத் தொடர்ந்து சுரீந்தர் கோலி உச்சநீதிமன்றத்தல் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதேபோன்று மொகீந்தர் சிங் விடுதலையை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சுரீந்தர் கோலிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதிபடுத்தியது.
 
இந்நிலையில் சுரீந்தர் கோலி உத்தரபிரதேச கவர்னர் மற்றும் குடியரசு தலைவருக்கு இவ்வழக்கில் கருணை மனு செய்துள்ளார்.
 
இதுபற்றி சிபிஐ வழக்கறிஞர் ஜெய்பிரகாஷ் சர்மா கூறுகையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி மே 31ல் தூக்கிலிட உத்தரவிட்டிருந்தது. ஆனால் சுரீந்தர் கோலி தற்பொழுது கருணை மனு செய்துள்ளார். இதனால் இவ்வழக்கு விசாரணை மே 13ல் என்ன தீர்ப்பு என்று தெரியவரும் என தெரிவித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நிதாரி வழக்கு: தூக்குத் தண்டணையை எதிர்த்து கருணை மனு"

Post a Comment