சென்னை, மார்ச் 13: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார்.
திமுக குழுவுடன் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இதன்மூலம், தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வதில் நிலவிய தேக்கநிலை முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, இந்தக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பட்டியலும் திங்கள்கிழமையே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு நிருபர்களிடம் கூறியது:
காங்கிரஸýக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் திருப்திகரமாக முடிவு காணப்பட்டுள்ளது. இறுதிப் பட்டியலுக்கு திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் திங்கள்கிழமை காலை ஒப்புதல் அளிப்பார்கள். அதன் பிறகு தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்படும் என்று தங்கபாலு கூறினார்.
திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள், பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொகுதிகளில் சிலவற்றை காங்கிரஸ் கட்சியின் ஒரு கோஷ்டியினர் கேட்டு நிர்பந்தம் செய்ததால் தொகுதிகளை ஒதுக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு இப்போது வேறு தொகுதிகளை வழங்கி, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
திட்டக்குடி, வேளச்சேரி, திருத்தணி உள்ளிட்ட தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பினர் உறுதியாக இருந்தனர். இதில் திட்டக்குடி விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அந்தத் தொகுதியை விட்டுத்தர தயாராக இல்லை.
இதேபோல் வேளச்சேரியும், திருத்தணியும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த இரு தொகுதிகளையும் விட்டுக்கொடுக்க பாமகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது.
பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில் பாமக குழுவினர் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவாலயத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், வேளச்சேரியைத் தர பா.ம.க.வும் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை முடித்துவிட்டு வெளியே வந்த பாமக தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ஓரிரு நாளில் தொகுதிகள் பட்டியல் வெளியாகும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் நிலவும் இழுபறி குறித்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஐவர் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
அதன்பிறகு, காங்கிரஸ் ஐவர் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணிக்கு அறிவாலயத்துக்கு வந்து திமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளில் சில தொகுதிகளையும், வெற்றி வாய்ப்புள்ள வேறு சில தொகுதிகளையும் வழங்க தி.மு.க. தரப்பு சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, தொகுதிகளை ஒதுக்கும் பிரச்னையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. வீ. தங்கபாலு தெரிவித்தார்.
சென்னையில் காங்கிரஸýக்கு 5 தொகுதிகளை அளிக்க தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளது. ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகிய தொகுதிகள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதையடுத்து கடந்த 4 நாள்களாக நிலவிய இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
திமுக அணியில் திமுக 121 இடங்களிலும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 63, பாமக 30, விடுதலைச் சிறுத்தைகள் 10, கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை 7, இந்திய யூனியன் முஸ்லீம் லிக் 2, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஓர் இடத்திலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸýக்குக் கூடுதலாக 3 தொகுதிகள் வழங்குவதற்காக ஏற்கெனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் இருந்து பாமக ஒரு தொகுதியையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியையும் திமுக ஒரு தொகுதியையும் விட்டுக்கொடுத்தன.
இப்போது, தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப்புள்ள சில தொகுதிகள் காங்கிரஸýக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

0 comments: on "தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியீடு"
Post a Comment