தலைப்புச் செய்தி

Monday, March 14, 2011

லிபியாவில் அல் ஜசீரா நிருபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்

லிபியாவில் தன் பணியில் ஈடுபட்டிருந்த அல் ஜசீரா படப்பிடிப்பாளர் அலிஹசன் அல் ஜாபர் பணி முடித்து விட்டு வீடு திரும்பும் போது சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.


கத்தார் நாட்டை சேர்ந்த அல்ஜாபர் (வயது 55). கெய்ரோவில் சினிமா போட்டோகிராபியில் பட்டம் பெற்றவர். கத்தாரில் உள்ள சி.என்.பி.சி., அரேபிய தொலைக்காட்சியில் இயக்குனராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்தை செய்தியாக வழங்கி விட்டு லிபியாவின் கிழக்கு நகரான பெங்காசி க்கு வாகனத்தில் திரும்பி கொண்டிருக்கும் நேரத்தில் கி மர்ம நபர்கள் சுட்டனர். இதில் 3 குண்டுகள் நெஞ்சில் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த கொலைக்கு அல்ஜசீரா நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது போன்ற கோழைத்தனமான மிரட்டலுக்கு அஞ்சாமல் எங்கள் பணி தொடர்ந்து நடக்கும் என்றும் குற்றவாளிகள் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கொலையில் அதிபர் கடாஃபி யின் தலையீடு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "லிபியாவில் அல் ஜசீரா நிருபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்"

Post a Comment